இருவரும் ஒன்றாகி விட்டோம் என்றாய்,
இணை பிரிய வாய்ப்பில்லை என்றாய்,
இனி எல்லாம் இனிமைதான் என்றாய், எனக்கு
இறக்கை முளைத்து விட்டது.
பூ வேண்டும் என்றாய்,
பொட்டு வேண்டும் என்றாய்,
மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன், எனக்கு
இறக்கை முளைத்து விட்டது.
கொலுசு வேண்டும் என்றாய்,
கொண்டு வந்து கொடுத்தவுடன்,
செல்லமாய் சிணுங்கினாய், எனக்கு
இறக்கை முளைத்து விட்டது.
செல்பேசி வேண்டும் என்றாய்,
சென்று வர வாகனம் வேண்டும் என்றாய்,
கொடுத்தவுடன், 'அன்பே' என்றாய், எனக்கு
இறக்கை முளைத்து விட்டது.
இலகுரக வாகனத்தில் என் இடுப்பை
இலகுவாக பிடித்துக் கொண்டு வந்தாய்,
இன்பமே நீதானென நினைத்தேன், எனக்கு
இறக்கை முளைத்து விட்டது.
காடுமேடெல்லாம் சுற்றினோம், அயல்
நாட்டிலிருந்து அத்தை மகன் வந்தான்,
சற்றும் நான் நினைக்கவில்லை, அவளுக்கு
இறக்கை முளைத்து விட்டது.
பட்சி பறந்து போச்சு பாஸ் ...!
p/c : https://www.instasaver.org
superb!
ReplyDeleteதனியாளா? புரியலையே!
//superb!//
ReplyDeleteThanks...
//தனியாளா? புரியலையே!//
சொல்கிறேன்...