என்னைப் பற்றி ...

My photo
Advocate, Author and Academician

Friday 30 December 2011

பலதும் சிலதும் ... வாழ்த்துகள் 2012 !பல பிரச்சனைகள்,
பல பாதிப்புகள்,
பல போட்டிகள், 
பல சோதனைகள்,
பல வேதனைகள்,
பல எதிர்பார்ப்புகள்,
பல ஏமாற்றங்கள்,
பல தொந்தரவுகள், 
பல துன்பங்கள்,
பல இடர்கள்,
பல இழப்புகள்,
பல நிர்பந்தங்கள்,
பல நிராகரிப்புகள்,
பல தவிப்புகள்,
பல தடுமாற்றங்கள்,
பல சலிப்புகள்,
பல சங்கடங்கள்,
பல சறுக்கல்கள்,
பல அயற்சிகள்,
பல பெயர்ச்சிகள்,

பட்டியல் நீளும் இந்தப்
பலது இருந்தாலும், இடையே,-

சில தீர்வுகள், 
சில வெற்றிகள்,
சில சாதனைகள்,
சில இன்பங்கள்,
சில ஆதாயங்கள்,
சில ஆதரவுகள், 
சில அனுபவங்கள்,
சில கேளிக்கைகள்,
சில ஏற்றங்கள்,
சில நிறைவுகள்,
சில நம்பிக்கைகள்,
சில முயற்சிகள்,
சில முடிவுகள்,
சில சேமிப்புகள்,
சில சேர்க்கைகள்,

இப்படி சிலதும் நடந்தன,
இதோ விடை பெறும் இந்த 2011-இல். 

பலது வந்தாலும்,
சிலது நடந்தாலும்,
சொல்வது யாதெனில்,-
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,
'வா' பார்த்துக் கொள்வோம் என்று
துணிவுடன், தன்னம்பிக்கையுடன்
தளராமல் இருக்கின்றோம்.

எண்களில் ஐந்து
என்பதற்கு எப்போதும்
சிறப்புண்டு, ஏற்றமுண்டு.
புத்தாண்டு 2012-ஐ கூட்டினால்
முத்தாக வருவது ஐந்துதானே?


பலன் தரவரும் 2012
'பல'தை சிலதாக்கி,
'சில'தை பலதாக்கி,
வாழ்வை வளமாக்கி,
வளர்ச்சியை கூட்டி,
இன்பத்தை பெருக்கி,
இல்லத்தை நலமாக்கி,
உள்ளத்தை நல்லதாக்கி,
உற்சாகத்தை வெள்ளமாக்கி,
உயர.. உயர.. உயர்த்த

2012
புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
விஷ் யு எ ஹாப்பி நியூ இயர், 2012  !!16 comments:

 1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்

  ReplyDelete
 2. 2012 க்கு பிரமாதமான உற்சாகமான நம்பிக்கையான வரவேற்பு!

  வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. அருமையான பதிவு!

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  நன்றி!

  ReplyDelete
 4. @ sakthi
  //இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்//

  Thanks and same to you..

  ReplyDelete
 5. @ ரமேஷ் வெங்கடபதி

  நன்றி .. நன்றி.. நன்றி..

  ReplyDelete
 6. வாவ் அட்டகாசமான பொன்னெழுத்துக்கள் மிக்க நன்றி நண்பா...!!!!

  ReplyDelete
 7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 8. அருமை ஐயா...

  தமிழ் வழக்குகளை அறிந்த வழக்கறிஞருக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 9. மற்றும் என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. @ MANO நாஞ்சில் மனோ
  //வாவ் அட்டகாசமான பொன்னெழுத்துக்கள் மிக்க நன்றி நண்பா...!!!!//

  நன்றியும்.. புத்தாண்டு நல்வாழ்த்துகளும்

  ReplyDelete
 11. @ ஆளுங்க (AALUNGA)
  //அருமை ஐயா...//

  நன்றியும்.. புத்தாண்டு நல்வாழ்த்துகளும்

  ReplyDelete
 12. @கவிதை வீதி... // சௌந்தர் //
  //ரைட்டு...//

  நன்றியும்.. புத்தாண்டு நல்வாழ்த்துகளும்

  ReplyDelete
 13. @ MANO நாஞ்சில் மனோ

  உறுப்பினராக இணைந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 14. நீங்கள் வாழ்வில் 'பல ' நன்மைகள் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 15. @ ஸ்ரவாணி
  //நீங்கள் வாழ்வில் 'பல ' நன்மைகள் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.//

  மிக்க நன்றி...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...