என்னைப் பற்றி ...

My photo
Advocate, Author and Academician

Saturday, 24 December 2011

அருகில் நீ இல்லையே..! - கவிஞர் பிஆர்ஜெ


மலை மீது 
மெல்லப் பனி தழுவ,
குளிருக்கு கம்பளியும்
அனலுக்கு தணலுமிருக்க,
அருகில் நீ இல்லையே..!


மாலை நேரத்து
மலை வாசப் பூக்கள்
வனம் எங்கும்
மணம் பரப்பிச் செல்ல,
அருகில் நீ இல்லையே..!

அந்தி சாய்ந்த காற்றை
சந்திரன் மேலும் குளிரூட்ட
காட்டு மரங்கள் சலசலக்க
உன் நினைவால் மூச்சுத் திணற,
அருகில் நீ இல்லையே..!

மௌனமே பேச்சுத் துணையாக
தனிமையே பெருங் கொடுமையாக
நினைத்த இடமெல்லாம் நீ தெரிய
கனத்த இதயம் கண்ணீர் வடிக்க
அருகில் நீ இல்லையே..! 

அருகில் நீ இருந்திருந்தால்,
பனிக்கு எதற்கு அனல் ?
பூவே என் வசமான பிறகு 
பூ வாசம் எதற்கு ?

மரங்களின் சலசலப்பு, உன்
கலகல சிரிப்பால் அடங்குமே!


அருகில் நீ இருந்திருந்தால்,
என் மூச்சே நீதானே, பிறகு
நான் எதற்கு திணற?
உன் பேச்சே வரம்தானே,
நான் சாபவிமோசனம் பெற.
என் தனிமை இனிமையாகிவிடுமே!

- கவிஞர் பிஆர்ஜெ



18 comments:

  1. உங்கள் கவிதை நன்றாக இருக்கின்றது

    ReplyDelete
  2. கவிதைக்கு பொய் அழகு என்பார்கள்...

    வழக்குறைஞரும் பொய் பேசுவர் என்பர்...

    இந்தக் கூட்டனி சேர்ந்ததில்...நமக்கு அருமையான கவிதை கிடைக்கிறது..

    தொடர்க..

    ReplyDelete
  3. @ Tamil Nenjan
    தங்கள் மறுமொழிக்கும் பாராட்டுக்கும் நன்றி...
    நான் பொய் பேசுவதில்லை..
    ஹாஹா..!

    ReplyDelete
  4. EKKAM KAVITHAYAAKIRATHU.IYARKAI KAVIGYANAAKKUKIRATHU.KVI ULLAM UNGALUKKU URITHTHAAKIRATHU.

    ReplyDelete
  5. @ Sethuraman Anandakrishnan
    //EKKAM KAVITHAYAAKIRATHU.IYARKAI KAVIGYANAAKKUKIRATHU.KVI ULLAM UNGALUKKU URITHTHAAKIRATHU.//

    உங்கள் மறுமொழியே கவிதையாக இருக்கின்றது...
    வருகைக்கு மிக்க நன்றி...

    I invite to read this too...
    மதனப் பெண் 34 - மாப்பிள்ளையின் முடிவு
    http://jayarajanpr.blogspot.com/2011/12/34.html

    ReplyDelete
  6. மார்கழி மாசம் தனியா டூர் போயிட்டு வந்த எஃபெக்டா!

    கவிதை நன்று!

    ReplyDelete
  7. கவிதைக்கு தனி வலைப்பூவா? வெரிஃபிகேஷனை எடுத்துவிடலாமே!

    ReplyDelete
  8. @ ரமேஷ் வெங்கடபதி

    வாங்க ரம்மி சார் .. வருகைக்கும் ஓட்டுக்கும் நன்றி..

    ReplyDelete
  9. @ ரமேஷ் வெங்கடபதி

    //மார்கழி மாசம் தனியா டூர் போயிட்டு வந்த எஃபெக்டா! கவிதை நன்று!//

    நான் தனியாள் சார் ...

    ReplyDelete
  10. @ ரமேஷ் வெங்கடபதி

    //கவிதைக்கு தனி வலைப்பூவா?//

    கதை, கவிதை, கட்டுரை என வாழ வேண்டும் சார்..

    ReplyDelete
  11. @ ரமேஷ் வெங்கடபதி

    //வெரிஃபிகேஷனை எடுத்துவிடலாமே!//

    எடுத்தாச்சு சார்..

    ReplyDelete
  12. அருகில் நீ இல்லையே..!

    ஏக்கத்தை கனமாக உணர்த்தும் உன்னத வரிகள் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. பொய் பேசாத, இனிமையான் கவிதையும், உருக்கமான கதையும் எழுதும் அருமையான வழக்கறிஞர்
    பேரறிஞருக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  14. கதை, கவிதை, கட்டுரை என வாழும் .

    விழிப்புணர்வூட்டும் அருமையான தங்கள் கட்டுரைகள் பகிர்வுகள் பயன் மிக்கவை..
    பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..

    ReplyDelete
  15. இராஜராஜேஸ்வரி

    //அருகில் நீ இல்லையே..!
    ஏக்கத்தை கனமாக உணர்த்தும் உன்னத வரிகள் பாராட்டுக்கள்..//
    எனது இந்தப் புதிய வலைப்பதிவிற்கு வருகை தரும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்..

    ReplyDelete
  16. இராஜராஜேஸ்வரி

    //பொய் பேசாத, இனிமையான் கவிதையும், உருக்கமான கதையும் எழுதும் அருமையான வழக்கறிஞர் பேரறிஞருக்கு வாழ்த்துகள்..//

    வாழ்த்துகளுக்கு நன்றி...

    ReplyDelete
  17. @ இராஜராஜேஸ்வரி
    //கதை, கவிதை, கட்டுரை என வாழும் .
    விழிப்புணர்வூட்டும் அருமையான தங்கள் கட்டுரைகள் பகிர்வுகள் பயன் மிக்கவை..
    பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..//

    பாராட்டுகளுக்கும், மறுமொழிகளுக்கும் நன்றி..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...