என்னைப் பற்றி ...

My photo
Advocate, Author and Academician

Tuesday 3 January 2012

பேரிடர் மேலாண்மை ?

புதுவையிலே
புயல் வரப் போறது தெரியும்...

கடலூரிலே
கடல் ஊருக்குள் வரப்போறது தெரியும்...

சென்னையிலே
தென்னை மரமெல்லாம் சாயப் போறது தெரியும்...

கப்பல்
கரை தட்டும்ன்னு தெரியும்...

'தானே'
தானா வந்திச்சா?

நாலு 
நாளைக்கு முன்னமே சொல்லிட்டு வந்திச்சு..!

காத்து வீசுனா
கடலோரம் காலின்னு தெரியும்..

மழை பெய்ஞ்ச
மக்கள் மாய்ந்து போவாங்கன்னு தெரியும்..

தண்ணி புகுந்தா
தவிச்சு போவாங்கன்னு தெரியும்..

வேகம் தெரியும்..!
விவேகம் வேணாமா..?

பேரிடர்ன்னு தெரியும்..
பேருக்கு கூட முன்னெச்சரிக்கை இல்லையே?

மக்களுக்கும் தெரியலே..
மகேசனுக்கும் புரியலே..

அப்புறம் எதுக்குங்க 
மேலாண்மை..? 

12 comments:

 1. இயற்கையின் சக்தி அளப்பரியது! புயலின் கோரத்தை சந்திக்காத தலைமுறைக்கு அதன் ஆற்றல் முன்னரே தெரியவில்லை!

  ReplyDelete
 2. 'தானே'
  தானா வந்திச்சா?

  நாலு
  நாளைக்கு முன்னமே சொல்லிட்டு வந்திச்சு..!

  அப்புறம் எதுக்குங்க
  மேலாண்மை..?

  இடித்துரைத்து
  எடுத்துரைக்கும் விழிப்புணர்வுப் பகிர்வு..

  ReplyDelete
 3. வேகம் தெரியும்..!
  விவேகம் வேணாமா..?

  விவேகானந்தரின் அவதார பூமியில்
  விவேகமற்ற் அவலம்...

  ReplyDelete
 4. @ இராஜராஜேஸ்வரி
  //இடித்துரைத்து
  எடுத்துரைக்கும் விழிப்புணர்வுப் பகிர்வு..//

  மறுமொழிக் கவிதைக்கு
  மனமார்ந்த நன்றி..

  ReplyDelete
 5. @ இராஜராஜேஸ்வரி

  //விவேகானந்தரின் அவதார பூமியில்
  விவேகமற்ற் அவலம்...//

  கொஞ்சம் முயற்சி பண்ணியிருந்த
  எதிர்பார்க்கப்பட்ட நிறைய சேதங்களில் இருந்து
  விலகி இருக்கும்படி செய்திருக்கலாங்க...

  ReplyDelete
 6. கண்டிப்பாக சுட்டிக் காட்டப்படவேண்டியதே ...
  தட்டிக்கேட்கப்படவேண்டியதே ....
  ஒருவேளை எப்போதும் போல் அண்டை மாநிலம் பக்கம்
  திசை திரும்பும் என்று அசால்ட் ஆக இருந்தார்களோ என்னமோ ??

  ReplyDelete
 7. @ ஸ்ரவாணி
  //கண்டிப்பாக சுட்டிக் காட்டப்படவேண்டியதே ...
  தட்டிக்கேட்கப்படவேண்டியதே .... ஒருவேளை எப்போதும் போல் அண்டை மாநிலம் பக்கம்
  திசை திரும்பும் என்று அசால்ட் ஆக இருந்தார்களோ என்னமோ ?//

  அருமையான தங்கள் கருத்துரைக்கு நன்றி...

  ReplyDelete
 8. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

  என்றைக்கு அரசாங்கம் இதுபோன்ற இயற்கையின் சீற்ற‌ங்கள் வருமென முன்பே தெரிந்திருந்தும் அவற்றிற்கு அணை போட முன்னேற்பாடுகள் செய்திருக்கிற‌து? பொது மக்களாகிய நாம் தான் அதிக விழிப்புணர்வுடனும் முன்னேற்பாடுகளுடனும் இருக்க வேண்டும்!!

  ReplyDelete
 9. @ மனோ சாமிநாதன்
  அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!
  என்றைக்கு அரசாங்கம் இதுபோன்ற இயற்கையின் சீற்ற‌ங்கள் வருமென முன்பே தெரிந்திருந்தும் அவற்றிற்கு அணை போட முன்னேற்பாடுகள் செய்திருக்கிற‌து? பொது மக்களாகிய நாம் தான் அதிக விழிப்புணர்வுடனும் முன்னேற்பாடுகளுடனும் இருக்க வேண்டும்!//

  சரியாகச் சொன்னீர்கள்...
  பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 10. பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சியினை
  இப்போதுதான் முதன்மை நிலை அதிகாரிகளுக்கு
  கொடுத்துக் கொண்டு உள்ளர்கள்
  அனேகமாக நைத்தும் அழிந்த போகும் முன்
  அனைவரும் அறியச் செய்துவிடுவார்கள் என் நினைக்கிறேன்
  அருமையான விழிப்புணர்வு பதிவுக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. //அனேகமாக நைத்தும் அழிந்த போகும் முன்
  அனைவரும் அறியச் செய்துவிடுவார்கள் என் நினைக்கிறேன்//

  தங்கள் கருத்துரைக்கு நன்றி..
  கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் சில உயிர்களையாவது காப்பாற்றி இருக்கலாம்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...