என்னைப் பற்றி ...

My photo
Advocate, Author and Academician

Saturday 2 February 2013

வாழ்ந்தாக வேண்டும்.... வா.. வா.. கண்ணே..!என்னதான் கோபித்துக் கொண்டாலும்
என்னத்தான்தானே கோபித்துக் கொண்டார்
என்றிருந்தவளை மாற்றியவர் யாரோ..?
என்னிடமிருந்து பிரித்தது எதுவோ..?

எங்கு சென்று வந்தாலும்
அங்கிங்கென தேடாமல், கண்
மங்கிக் காத்திருக்கும் என்னவளை
இன்றிங்கு காணாமல் தவிக்கின்றேன்..!

வாய்விட்டு எதையும் கேட்காதவள்
வாய்விட்டு என்ன கூறினாளோ..?
காது கொடுத்து கேட்டவர்
கதையை திரித்து விட்டாரோ?

முடிந்ததென நினைத்தாளா? இல்லை
முறிந்து விட்டதாக நினைத்தாளா?
மடிந்தாலும் முடியாதது இது !
கொடி சாய்ந்தாலும் முறியாதிது !

கேட்காமல் அனைத்தையும் தந்தேன்,
உன் அணைப்பிற்காக அல்ல.
சொல்லாமல் எல்லாவற்றையும் செய்தேன்,
நீ சொல்லாமல் செல்வதற்கல்ல.

பிழை சொல்லி இருந்தால்,
பிழைக்கும் வழி சொல்லியிருப்பேன்.
பிழைக்கும் மன்னிப்புண்டு; இங்கு
பிழை செய்தவள் நீதான்.

தாய் வீடு தங்குமிடம்;
தாயாய் தாங்கிய என்னிடம்தான்
நீ வாழ்ந்தாக வேண்டும்  
வா.. வா... கண்ணே !

11 comments:

 1. பலே..பலே..!

  பிரிவுகள் பல உணர்வுகளைத் தரும்..!
  பல தடைகளைத் தகர்க்கும்..!
  மாயத்திரைகளை விலக்கும்..
  வல்லமைக் கொண்டது !

  விரைவில் தம்பதியர் கூடித்திரிய...வாழ்த்துக்களுடன் !

  ReplyDelete
 2. //பிரிவுகள் பல உணர்வுகளைத் தரும்..!
  பல தடைகளைத் தகர்க்கும்..!
  மாயத்திரைகளை விலக்கும்..
  வல்லமைக் கொண்டது !//

  சபாஷ் சரியாச் சொன்னீங்க சார்.....
  ஒரு தரப்பு இப்படி முன் வைக்கும் போது, எதிர் தரப்பு புரிந்து செயலாற்றினால் தங்கள் கருத்துப்படி கூடித் திரியும் நாள் வெகு தூரத்தில் இல்லாமல் போய் விடும்.
  வருகைக்கு நன்றி சார்.

  ReplyDelete
 3. என்ன இருந்தாலும் அவர்கள் பிறந்த வீட்டில் இருக்கும் போது அவர்களின் சந்தோசமே தனி...(அவர்களின் மனநிலையிலிருந்து) நாமே சந்தோசமாக அனுப்பி வைத்தால், பத்து நாட்கள் என்று செல்பவர்கள் 2/3 நாட்களில் திரும்பி விடுவார்கள்...

  வரிகளில் அன்பு பொங்குகிறது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. @ திண்டுக்கல் தனபாலன்2 February 2013 18:56

  //வரிகளில் அன்பு பொங்குகிறது... வாழ்த்துக்கள்...//

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்..

  ReplyDelete
 5. பிழை சொல்லி இருந்தால்,
  பிழைக்கும் வழி சொல்லியிருப்பேன்.
  பிழைக்கும் மன்னிப்புண்டு. இங்கு
  பிழை செய்தவள் நீதான்...

  மன்னிப்பது தெய்வகுணமல்லவா ..!
  மனம் மாற்றும் கவிதை ..பிழை பொறுக்கும் மாண்பு ..அருமை ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. @ இராஜராஜேஸ்வரி3 February 2013 11:33

  //மன்னிப்பது தெய்வகுணமல்லவா ..!
  மனம் மாற்றும் கவிதை ..பிழை பொறுக்கும் மாண்பு ..அருமை ..பாராட்டுக்கள்..//

  பலருக்கு தெரியவில்லை. சண்டையிட்டே சாதிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ...

  ReplyDelete
 7. வணக்கம் வக்கில் சார்....

  பாடல் மிக மிக அருமையாக உள்ளது.

  ReplyDelete
 8. கவிதை மிகவும் அருமையாக உள்ளது.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 9. @ அருணா செல்வம்3 February 2013 20:33

  //பாடல் மிக மிக அருமையாக உள்ளது.//

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 10. போட்டியில் கலந்து கொள்வது குறித்து மகிழ்ச்சி சார், உங்களது மெயில் ID எனது bsrinivasanmca@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பினால் தொடர்புக்கு வசதியாய் இருக்கும், தங்களது பெயரையும் பட்டியலில் இணைத்துக் கொள்கிறேன்

  ReplyDelete
 11. ''..தாய் வீடு தங்குமிடம்;
  தாயாய் தாங்கிய என்னிடம்தான்
  நீ வாழ்ந்தாக வேண்டும்
  வா.. வா... கண்ணே !...'''

  நீரோட்டம் போன்ற வரிகள் நழுவி ஓடுகிறது.
  ரசித்தேன் .
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...