என்னைப் பற்றி ...

My photo
சொல்கிறேன்..

Saturday, 14 January 2012

இத் தையில் அத்தை மகள் !


அத் தையில்
அத்தை மகள் வந்தாள்.
தத்தை மொழி சொன்னாள்; முத்
தத்தை கேட்டாள்.

மாசிலா அவளை
மாசியில் மண முடித்தேன்.
மா புளிப்பில்லை என்றாள்; அம்
மாவிற்கு அச்சாரமிட்டாள்.

பங்குனி வந்தது
பங்கினி இல்லை என்றாள்.
பாங்கு பார்க்கச் சொன்னாள்; தெம்
மாங்கு பாடினாள்.

நித்திரை நிலவுக்கு
சித்திரைச் சூரியன் ஆகாது.
நிழலில் இருக்கின்றேன் என்றாள்; நற்
சூழலில் வைத்திருக்கின்றேன்.

வைகாசி வந்தது.
கை பிடித்தார் வைத்தியர்.
தையில் குழந்தை என்றார்; அத்
தை மகளுக்கு.

ஆனி பிறந்தது.
இனிமை இன்னும் கூடியது.
மேனி மெருகு ஏறியது; நாணிக்
கோணி நடந்தாள்.

ஆடியில் தாய்வீட்டினர்
தேடி வந்து பார்த்தனர்.
ஓடிப் பிடித்து ஆடியவர்கள்; சரி
ஜோடி என்றனர்.

தாவணி போட்டிருந்தவளுக்கு
ஆவணியில் வளை காப்பு.
கரம் பிடித்தவள் சென்றாள், தன்
பிறந்த வீட்டிற்கு.

புரட்டாசி மாதம்
புதிதாக தோன்றியது எனக்கு.
புறப்பட்டேன் என்னத்தை வீட்டுக்கு, அவள்
பரவசம் ஆனாள்.

குழந்தை உதைத்தது,
குளுமை ஆன ஐப்பசியில்.
அதோடு பேசத் தொடங்கினாள், நான்
ஊமை ஆனேன்.

கார்த்திகை முருகனா,
கிருத்திகை பெண்ணா, எதுவானாலும்
நலமுடன் பிறக்க வேண்டுகிறேன், என்
குல தெய்வத்தை.

பனி முடிந்து
மார்கழியும் விடை பெற்றது.
பனிக்குடம் உடைந்து நீர்; பிரசவ
வலி வந்தது.

இத் தையில்
அத்தை மகளுக்கொரு மகள்.
தாயும்-சேயும் நலம்; பொங்கலுடன் 
கரும்பும் சுபம் !

அனைவருக்கும் 
பொங்கல் நல் வாழ்த்துகள் !

21 comments:

 1. வித்தியாசமாக யோசித்து ஒரு அசத்தலான
  சிறப்புப் பதிவைக் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்
  மனம் கவர்ந்த பதிவு

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தமிழர் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 3. Arumai Sir. Azhagana Kavithai. Pongal Vaalthukkal!

  ReplyDelete
 4. கவிதை தமிழ் மாதங்களின் புகழ் பாடுகிறது....

  பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. @ Ramani
  //வித்தியாசமாக யோசித்து ஒரு அசத்தலான
  சிறப்புப் பதிவைக் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்
  மனம் கவர்ந்த பதிவு//

  அழகான கருத்துரைக்கு நன்றி
  பொங்கல் வாழ்த்துகள் ..
  வரும் நாளெல்லாம் இனிக்கட்டும்
  வாழ்க... வளர்க ...

  ReplyDelete
 6. @ நண்டு @நொரண்டு
  //எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்//

  பொங்கல் வாழ்த்துகள் ..
  வாழ்க... வளர்க ...

  ReplyDelete
 7. @ துரைடேனியல்
  //Arumai Sir. Azhagana Kavithai. Pongal Vaalthukkal!//

  Nanri Sir...
  Valthugal.

  ReplyDelete
 8. @தமிழ்வாசி பிரகாஷ்
  //கவிதை தமிழ் மாதங்களின் புகழ் பாடுகிறது....//

  எனது கவிதையை நேசித்து எழுதியமைக்கு நன்றி
  பொங்கல் வாழ்த்துகள் ..
  வரும் நாளெல்லாம் இனிக்கட்டும்
  வாழ்க... வளர்க ...

  ReplyDelete
 9. என்னவென்று சொல்வதம்மா..
  கவி' தை' அதன் பொருளழகை!

  இன்றைய பொங்கல் நாள்
  இனிதாகட்டும்!

  ReplyDelete
 10. @ ரமேஷ் வெங்கடபதி
  //என்னவென்று சொல்வதம்மா..
  கவி' தை' அதன் பொருளழகை!//

  தைக் கவிதைக்கு
  வாழ்த்தை தந்தமைக்கு
  சிந்தை குளிர்ந்தது.
  பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. அததனை மாதங்களையும் கவினுற பயன்படுத்திஅய் இனிய கவிதைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. @ இராஜராஜேஸ்வரி
   //அததனை மாதங்களையும் கவினுற பயன்படுத்திஅய் இனிய கவிதைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..//

   நன்றி.. நன்றி.. நன்றி.. அம்மையீர்..

   Delete
 12. இத் தையில்
  அத்தை மகளுக்கொரு மகள்.
  தாயும்-சேயும் நலம்; பொங்கலுடன்
  கரும்பும் சுபம் !


  சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிந்தது போல் இனிய நிறைவான கவிதை..

  இனிய் பொங்கல் வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. @ இராஜராஜேஸ்வரி
   //சர்க்கரைப்பந்தலில் தேன்மாரி பொழிந்தது போல் இனிய நிறைவான கவிதை..
   இனிய் பொங்கல் வாழ்த்துகள்..//

   தித்திக்கும் தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி... பொங்கல் வாழ்த்துகள்..

   Delete
 13. முத்திரையாம் இக்கவியால்
  இத்தரையில் என்னை
  சத்தான கற்பனை
  கொத்தாக உள்ளதென
  மெத்தாக உரைத்தீர் நண்பரே........

  அருமை அருமை.

  தித்திக்கும் அச்சுவெல்லமாய்
  திகட்டாத செங்கரும்பாய்
  பொங்கி வரும் புதுப் பொங்கலாய்
  மனதிலும் வாழ்விலும்
  மகிழ்ச்சி பொங்கி தங்கி இருக்க

  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. @ மகேந்திரன்

  //தித்திக்கும் அச்சுவெல்லமாய்
  திகட்டாத செங்கரும்பாய்
  பொங்கி வரும் புதுப் பொங்கலாய்
  மனதிலும் வாழ்விலும்
  மகிழ்ச்சி பொங்கி தங்கி இருக்க
  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்//

  எங்கும் மங்களம் தங்க பொங்கல் நல்வாழ்த்துகள்.
  தங்கள் கருத்துரைக்கு நன்றி..

  ReplyDelete
 15. வித்தியாசமான கவிதைங்க. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. அருமை கவிதை வாழ்த்துகள்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...