என்னைப் பற்றி ...

My photo
Advocate, Author and Academician

Tuesday 27 December 2011

நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க... ?

"கஷ்டம்ன்னா 
கண்ணு தெரியுது.."

நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!

"உங்களை அவங்களோட
இருட்டை விரட்ற
மெழுகுவர்த்தியா
நினைக்கிறாங்கன்னு
பெருமைப்படுங்க"

"காரியம் முடிக்க 
காலைப் பிடிக்கிறான் பாரு"

நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!

"உங்களால மட்டும்தான்
முடியும்ன்னு அவங்க
நம்புறாங்கன்னு
பெருமைப்படுங்க"


"மனுசன்னா கொஞ்சமாவது 
நன்றி விசுவாசம் வேணும் " 

நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!

"தொந்தரவு
தொலைந்து போச்சுன்னு
நிம்மதியா இருங்க"

 "அவங்க செஞ்ச துரோகத்தை 
மன்னிக்க முடியாது"

நீங்க ஏன்
அப்படி நினைக்கிறீங்க... ?
இப்படி நினைங்க..!

"உங்களுக்கு
'பரந்த மனசு' என்பதை
அவங்க உறுதிபடுத்தறாங்க"

ஒன்னு மட்டும் நல்லா சொல்றேன்,- 
"விட்டுக் கொடுப்பவர் 
கெட்டுப் போவதில்லை.
தட்டிக் கொடுப்பவர் 
தாழ்ந்து போவதில்லை."
காத்தோட திசைய மாத்த முடியாது - ஆனா..
காத்துக்கு தோதா சமயம்  பாத்து 
கப்பல் விடலாம் இல்லையா?


இதுதாங்க மேட்டரு,
இனி போடுங்க மீட்டரு !

9 comments:

  1. நம்மை பயன்படுத்தி காரியசித்தி அடைந்தவுடன் பிறகு கைகழுவி விலகிச் செல்லும்போது ஏற்படும் ஆதங்கக் கேள்விகள் அவை!
    ஏணியாக இருந்தோம் எனும் பெருமை போதும்!

    ReplyDelete
  2. @ ரமேஷ் வெங்கடபதி

    //நம்மை பயன்படுத்தி காரியசித்தி அடைந்தவுடன் பிறகு கைகழுவி விலகிச் செல்லும்போது ஏற்படும் ஆதங்கக் கேள்விகள் அவை!ஏணியாக இருந்தோம் எனும் பெருமை போதும்//

    Thanks for comments friend...

    ReplyDelete
  3. ஆஹா மனதில் நேர்மறையான எண்ணங்களை வளரச்செய்யும் கருத்து கொண்ட பதிவு அருமை நண்பரே

    விரோதத்தை அழித்து உறவை வளர்க்கும் வார்த்தைகள்
    அருமை



    ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

    ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  4. @ M.R
    //ஆஹா மனதில் நேர்மறையான எண்ணங்களை வளரச்செய்யும் கருத்து கொண்ட பதிவு அருமை நண்பரே விரோதத்தை அழித்து உறவை வளர்க்கும் வார்த்தைகள் அருமை //

    அருமையான புரிந்துணர்வுக்கும் மறுமொழிக்கும் நன்றி..

    ReplyDelete
  5. @ ÁLVARO GÓMEZ CASTRO
    //Hi, I have been visiting your blog. ¡Congratulations for your work! I invite you to visit my blog about literature, philosophy and films:http://alvarogomezcastro.over-blog.es
    Greetings from Santa Marta, Colombia//

    Dear Friend,

    At the out set I thank you for your visit to my blog.

    I visited your blog and I found that it is in Spanish. However I managed to translate it into English with the help of software. Then only I can able to understand how amazing your blog is .. I really appreciate your work and contributions.. Keep writing and keep visiting my blog...

    Greetings.

    Jayarajan P.R., India.

    ReplyDelete
  6. நீங்க ஏன்
    அப்படி நினைக்கிறீங்க... ?
    இப்படி நினைங்க..!
    என்று என்றென்றும்

    இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு
    அழைத்துச்செல்லும் பதிவுக்குப் பாராட்டுக்கள் .வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. @ இராஜராஜேஸ்வரி
    //என்றென்றும் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு
    அழைத்துச்செல்லும் பதிவுக்குப் பாராட்டுக்கள் .வாழ்த்துகள்..//

    மறுமொழிக்கு நன்றி..

    ReplyDelete
  8. எதையும் பாஸிடிவ் ஆக மாற்றி யோசித்தால் மனதுக்கு மகிழ்ச்சியே என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  9. @வை.கோபாலகிருஷ்ணன்

    பொருள் பொதிந்த தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...